உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபயிற்சி சென்றவரை முட்டி துாக்கி வீசிய மாடு

நடைபயிற்சி சென்றவரை முட்டி துாக்கி வீசிய மாடு

புழல்; நடைபயிற்சி சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை மாடு ஒன்று முட்டி துாக்கி வீசியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் அடுத்த சூரப்பட்டு சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாய்ராம், 61; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதேபோல, நேற்று காலை புழல் -கதிர்வேடு சாலை, பாலாஜி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரே வந்த மாடு ஒன்று, திடீரென சாய்ராமை முட்டி துாக்கி சாலையில் வீசியது. சாலையில் விழுந்த சாய்ராமை விடாமல் மாடு முட்டியது. இதில், அவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் சாய்ராமை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக ஐ.சி.எப்., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சாய்ராமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புழல் போலீசார் வழக்கு பதிந்து, மாட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை