உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீரில் சிக்கி பசு மாடு பலி

மழைநீரில் சிக்கி பசு மாடு பலி

அம்பத்துார், அம்பத்துார், அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.இந்நிலையில், கொரட்டூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில், ஆயுதப்படை காவலர் குடியிருப்பு அருகே உள்ள மின் பகிர்மான பெட்டி அருகே தண்ணீர் தேங்கியது. அவ்வழியாக சென்ற பசு மாடு, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இதனால் பாதசாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து சென்ற அம்பத்துார் மண்டல ஊழியர்கள், இறந்த மாட்டை அப்புறப்படுத்தினர். மாடு மின்சாரம் பாய்ந்ததால் இறந்ததா அல்லது உடல்நிலை மோசமடைந்து இறந்ததா என, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை