உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பள்ளிகளுக்கான கிரிக்கெட்: ஜேப்பியார் பள்ளி வெற்றி

 பள்ளிகளுக்கான கிரிக்கெட்: ஜேப்பியார் பள்ளி வெற்றி

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ஜேப்பியார் மெட்ரிக் பள்ளி அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான வேந்தர் கணேசன் கோப்பை கிரிக்கெட் போட்டி, பையனுார் வளாகத்தில் நடக்கின்றன. போட்டியில், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்று மோதி வருகின்றன. நேற்று காலை நடந்த, 'நாக் அவுட்' முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற சீயோன் பள்ளி, 17.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 78 ரன்கள் அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த ஜேப்பியார் மெட்ரிக் பள்ளி, 5 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 82 ரன்களை அடித்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை