உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரிக்கெட்: யங் ஸ்டார்ஸ் கிளப் அணி வெற்றி

கிரிக்கெட்: யங் ஸ்டார்ஸ் கிளப் அணி வெற்றி

சென்னை:சென்னையில் நடந்த வி.ஏ.பி., கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், யங் ஸ்டார்ஸ் கிளப் அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட அளவில், வி.ஏ.பி., கோப்பைக்கான முதல் டிவிஷன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை எம்.ஆர்.எப்., பச்சையப்பாஸ் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்த போட்டியில் யங் ஸ்டார்ஸ் கிளப் அணி, குளோப் டிராட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. முதலில் 'டாஸ்' வென்ற குளோப் டிராட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரரான அமித் சாத்விக் 40 ரன்கள் குவித்து, அணிக்கு ஆறுதல் தந்தார். பின் வந்த வாஷிங்டன் சுந்தர் 36, குரு ராகவேந்திரன் 26 ரன்கள் எடுத்து, அணிக்கு உதவினர். முடிவில் அந்த அணி 49.1 ஓவரில் 163 ரன்கள் எடுத்து, ஆல் - அவுட் ஆனது. இரண்டாவதாக பேட்டிங் செய்த யங் ஸ்டார்ஸ் கிளப் அணிக்கு, துவக்க ஆட்டக்காரரான மிதுல்ராஜ் 61 ரன்கள் எடுத்து கொடுத்தார், அணிக்கு ரன்களை சேர்த்தார். பின் வந்த நிதிஷ் எஸ் ராஜகோபால் 70 ரன்கள் குவித்தார். இதையடுத்து, யங் ஸ்டார்ஸ் கிளப் அணி, 31.3 ஓவர் முடிவில், 164 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !