உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரும்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது

இரும்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், சீனிவாசா நகர், கவிமணி தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 50. இவரது வீட்டில் கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள், அவ்வப்போது திருடப்பட்டு வந்தன. கடந்த 29ல், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், மணிவண்ணன் வீட்டு வாசலில் இருந்த 50 கிலோ இரும்பு கம்பிகளை திருடி தப்பினர். மணிவண்ணன் புகாரை பெற்ற மடிப்பாக்கம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட வேளச்சேரி மணிகண்டன், 22, பிரவித், 24, ஹரி பிரதீஷ்குமார், 22, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். 7,500 ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ இரும்பு கம்பிகளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை