உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

பெண்ணுக்கு தொந்தரவு: வாலிபர் கைது அண்ணா நகர்: அண்ணா நகர் பகுதியில் கணவருடன் வசிக்கும் 25 வயது பெண், கடந்த 29ம் தேதி இரவு, எட்டாவது பிரதான சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஏ.ஹெச்., சந்திப்பு அருகே, காரில் வந்த நபர், பெண்ணிடம் ஆபாசமாக பேசி தவறான முறையில் அணுகியுள்ளார். அப்பெண் சத்தம் போடவே, அந்நபர் அங்கிருந்து தப்பினார். போலீசார், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன், 29, என்பவரை கைது செய்தனர். விசாரணையில், புகைப்படக் கலைஞராக பணியாற்றும் அவர், பெண்ணிடம் தவறான முறையில் நடந்தது உறுதியானது. அவரை நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை