உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்/

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை புழல்: விநாயகபுரம், ராமலிங்கா தெருவைச் சேர்ந்தவர் வல்லரசு, 25; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி காயத்ரி, 23. இவர்களுக்கு, 3, 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. வல்லரசு தினமும் மது குடித்து வந்து சண்டையிட்டுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த காயத்ரி நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புழல் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது. ----------------- கஞ்சா விற்ற இருவர் கைது * எம்.கே.பி.நகர், மேற்கு அவென்யூ சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த புளியந்தோப்பு, தட்டாங்குளத்தைச் சேர்ந்த விஜய், 33, சுரேஷ், 30 ஆகியோரை, எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி