உள்ளூர் செய்திகள்

க்ரைம் கார்னர்

கார் மோதி பெண் பலி ஆலந்துார்: ஆலந்துார், தண்டுமா நகரைச் சேர்ந்த குமார் மனைவி இசக்கியம்மாள், 59; பரங்கிமலையில் தனியார் நிறுவனம் ஒன்றில், டீ தயாரிக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், பரங்கிமலை, பால்வேல்ஸ் சாலையை கடக்கும்போது, 'ஷிப்ட் டிசையர்' கார் மோதியதில் காயமடைந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான துறையூரைச் சேர்ந்த தினேஷ்குமார், 21, என்பவர் கைது செய்யப்பட்டார்.

Galleryபோதை வழக்கில் மாணவன் உட்பட மூவர் கைது வானகரம்: போரூர், 'டோல்கேட்' சர்வீஸ் சாலையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அய்யப்பன்தாங்கல் சரண்ராஜ், 36, கல்லுாரி மாணவன் ரக் ஷித் ரெக்ஜின்மோன், 23, மற்றும் ஜமுனாகுமார், 27, ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மெத் ஆம்பெட்டமைன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மூவரும், கல்லுாரி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை சப்ளை செய்தது தெரிந்தது. விசாரணைக்கு பின் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை