மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது
25-Sep-2025
பைக் திருடர்கள் பிடிபட்டனர் புழல்: புழல், அசோக் அவென்யூவைச் சேர்ந்தவர் சிதம்பரம், 23. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது பைக், கடந்த 18ம் தேதி திருட்டுபோனது. விசாரித்த புழல் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அண்ணா நகரைச் சேர்ந்த சூரியமூர்த்தி, 19, செங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன், 20, ஆகியோரை நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். வீடு புகுந்து திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைது பெரம்பூர்: பெரம்பூர், சாந்தி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரதீப்குமார், 66. கடந்த 16ம் தேதி இவரது வீட்டில் திருட்டு போனது. திரு.வி.க., நகர் போலீசாரின் விசாரணையில், பெரம்பூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சிவா, 26, ஆண்டாள்குப்பத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சாய்லு உசேன், 26, ஆகியோர் திருடியது தெரிய வந்தது. போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். திருடிய வெள்ளி பொருட்கள், மடிக்கணினி, ஸ்பீக்கர், பட்டுப்புடவைகள், மீட்கப்பட்டன. ராணுவ வீரர் தற்கொலை முயற்சி பெரம்பூர்: வியாசர்பாடி, கே.வி.கே., சாமி தெருவைச் சேர்ந்தவர் விமல் ராஜ், 36; ராணுவ வீரர். இவருக்கு, மனைவி மற்றும் 2 வயதில் மகன் உள்ளார். தற்போது திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வரும் விமல் ராஜ், கடந்த மாதம் 6ம் தேதி, 45 நாள் விடுமுறையில் வந்தார். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்ப இருந்த நிலையில், குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாமல், நேற்று முன்தினம் இரவு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர். மகளை கொன்றவர் மீது புகார் ஓட்டேரி: ஓட்டேரி அருகே அயனாவரத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 35. இவரது மனைவி ரெபேக்கா, 26. இவர்களின் மகள் ஸ்டெபி, 6. கடந்த ஜூலை 20ம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், சதீஷ் ஆத்திரத்தில் மகள் ஸ்டெபியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இவ்வழக்கில் சிறையில் இருந்து சில தினங்களுக்கு முன் ஜாமினில் வந்தவர், மனைவி மற்றும் அவரது சகோதரிக்கு மொபைல் போன் மற்றும் சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமறைவு ரவுடிகளுக்கு 'காப்பு' சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இளம்பருதி, 38, சஞ்சய் 20, சரித்திர பதிவேடு குற்றவாளிகளான இவர்கள், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். காசிமேடைச் சேர்ந்தவர் ரமேஷ், 26; கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அதேபோல, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ், 32, கடந்த 2020ல் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார். அடிதடி வழக்கில் பெரம்பூரைச் சேர்ந்த இமானுவேல், 24, என்பவர் தேடப்பட்டு வந்தார். மேற்கண்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி சம்பந்தப்பட்ட போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கத்தியுடன் உலா ரவுடிகள் கைது எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, எஸ்.எம்.நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், நேற்று கத்தியுடன் சுற்றித்திரிந்த வியாசர்பாடி, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணா, 28, பி.வி.காலனியைச் சேர்ந்த ஜோதிஸ்வரன், 32, புழல், லட்சுமியம்மன் கோவில் நகரைச் சேர்ந்த ஆகாஷ், 25, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அதேபோல, கொடுங்கையூர் குப்பைமேடு அருகே, பொதுமக்களிடம் போதையில் தகராறில் ஈடுபட்ட கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த கார்த்திக், 20, லாரன்ஸ், 23, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். விடுதியில் வாலிபர் தற்கொலை கொரட்டூர்: மணலி, ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சரண், 25. இவர், கடந்தாண்டு டாபினி பிரியா, 23, என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சரணை பிரிந்த பிரியா, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், சரண் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், பாடி, சி.டி.எச்., சாலை அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய சரண், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25-Sep-2025