மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்: குட்கா பறிமுதல்
09-Nov-2025
கத்திகளுடன் வலம் வந்த மூவருக்கு 'கம்பி' சென்னை: மந்தைவெளி மேம்பால ரயில் நிலையம் அருகே, அபிராமபுரம் போலீசாரின் வாகன சோதனையில், பைக்கில் பட்டாக்கத்திகளுடன் வலம் வந்த இருவர், நேற்று முன்தினம் இரவு சிக்கினர்; ஐந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த அஜய், 19, சஞ்சய், 23, என்பது தெரிய வந்தது. மந்தைவெளிபாக்கத்தைச் சேர்ந்த மகேந்திரன், 34, என்பவர், கத்தியை கொடுத்து வைத்திருந்ததாகவும், மீண்டும் அவரிடம் கொடுக்க சென்றபோது சிக்கியதும் தெரிய வந்தது. மந்தைவெளி, அல்போன்சா மைதானம் அருகே கத்தியை வாங்குவதற்காக காத்திருந்த மகேந்திரன், 34, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பெண்ணிடம் போன் பறித்த 3 சிறுவர்கள் கைது ஏழுகிணறு: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா, 45. இவர் கடந்த அக்டோபரில், மின்ட் சாலை வழியாக மொபைல் போனில் பேசியபடி சென்றபோது, பைக்கில் வந்த மூவர், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர். விசாரித்த ஏழுகிணறு போலீசார், திருட்டில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 14, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்களை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், மூவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 5 மாத ஆண் சிசு உடல் மீட்பு கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு சிக்னலையொட்டி உள்ள பாழடைந்த கட்டடத்தின் அருகே, பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் சிசு உடல் கிடந்துள்ளது. இதை கண்ட துாய்மை பணியாளர்கள், மேடவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சிசுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர். 2,250 போதை மாத்திரைகள் பறிமுதல் ஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர், ஐ.ஓ.சி., யார்டு அருகே போதை மாத்திரைகள் பதுக்கி விற்ற, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், 25; புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 23, ஆகியோரை கைது செய்த போலீசார், 2,250 போதை மாத்திரைகளை நேற்று பறிமுதல் செய்தனர்.
09-Nov-2025