உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர்: கஞ்சா விற்ற தம்பதி கைது

 கிரைம் கார்னர்: கஞ்சா விற்ற தம்பதி கைது

அயனாவரம்: அயனாவரம், பச்சைக்கல் பேருந்து நிறுத்தம் அருகில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பொன்னிமேடு பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது, 27, அவரது மனைவி சோனியா ராஜ், 25, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்; 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வழிப்பறி செய்த இருவர் கைது அயனாவரம்: அயனாவரம், பாளையக்காரன் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார், 58. அதே பகுதியில் இவர் நடத்தும் டிபன் கடைக்கு நேற்று முன்தினம் வந்த இருவர், சாப்பிட்டு விட்டு, கத்தியை காட்டி, கல்லா பெட்டியில் இருந்த 200 ரூபாயை எடுத்து தப்பினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 27, விஸ்வநாதன், 44, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ