கிரைம் கார்னர்
கஞ்சா விற்ற சகோதரியர் பிடிபட்டனர் ஓட்டேரி: ஓட்டேரி, திடீர் நகரில் நேற்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ரேகா, 39, அவரது தங்கை மரியா, 23 ஆகியோரை, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் கைது செய்தனர்; 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, வியாசர்பாடி, பி கல்யாணபுரத்தில் கஞ்சா விற்ற இன்பா, 22, என்பவரை, வியாசர்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர். வியாபாரிகளிடம் பணம் பறித்த ஐவருக்கு 'காப்பு' புளியந்தோப்பு: புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே வியாபாரிகளை மிரட்டி, பணம் பறித்த புளியந்தோப்பு கஸ்துாரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்த மணியரசன், 21, செல்வம், 23, கார்த்தி, 32, மணிகண்டன், 21, பிரசாந்த், 26 ஆகிய ஐந்து பேரை, நேற்று புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.