மேலும் செய்திகள்
3.4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் சுற்றிவளைப்பு
16-Jul-2026
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் பின்புறம் உள்ள சாலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 25, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். துணிக்கடை ஊழியர்கள் மோதல் வண்ணாரப்பேட்டை: தண்டையார்பேட்டை, அஜிஸ் நகரைச் சேர்ந்தவர் அஜித், 29. இவர் வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அருகில் உள்ள துணிக்கடையில் பணிபுரிபவர் மணிமாறன், 26. வாடிக்கையாளரை தாங்கள் பணிபுரியும் கடைகளுக்கு அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட தொழில் போட்டியில், மணிமாறன், கடிகாரத்தால் அஜித்தின் முகத்தில் தொடர்ந்து குத்து விட்டார். இதில் ரத்த காயமடைந்த அஜித், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரித்த வண்ணாரப்பேட்டை போலீசார், மணிமாறனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
16-Jul-2026