உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 7.5 சவரன் செயின் பறித்த இருவர் கைது

7.5 சவரன் செயின் பறித்த இருவர் கைது

கொளத்துார்: கொளத்துார், அக்பர் சதுக்கம் பகுதியைச் சேர்ந்த தேவசகாயம், 68, அவரது மனைவி சுசிலா, 62, ஆகியோர், ஜி.கே.எம்., காலனி தெரு வழியாக, நேற்று முன்தினம் சர்ச்சுக்கு நடந்து சென்றனர். பைக்கில் வந்த இருவர், சுசிலாவின் 7.5 சவரன் தாலிச் செயினை பறித்து தப்பினர். கொளத்துார் போலீசார் விசாரித்து, இத்திருட்டில் ஈடுபட்ட அமைந்தகரையைச் சேர்ந்த பிரகாஷ், 33, தாஜுதீன், 23, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். செயினை தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் கொடுத்து உருக்கி, ஆறு சவரனுக்கு இரண்டு செயின் மற்றும் இரண்டு தங்க மோதிரம் வாங்கியது தெரியவந்தது. அவற்றையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை