உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

மாணவியரிடம் சில்மிஷம்: கடைகாரர் கைது வேளச்சேரி: வேளச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியருக்கு ஆசிரியர்கள், ‘குட் டச், பேட் டச்’ சொல்லி கொடுத்துள்ளனர். அப்போது, சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்க செல்லும்போது, பள்ளிக்கு அருகில் உள்ள கடைக்காரர், ‘பேட் டச்’ செய்துள்ளதாக, ஐந்துக்கும் மேற்பட்ட மாணவியர் தெரிவித்தனர். இது குறித்த புகாரின்படி கிண்டி மகளிர் போலீசார், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்நிலையில் கடை உரிமையாளர் ஆறுமுகம், 58, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !