மேலும் செய்திகள்
சவுக்கு சங்கர் மீது கோவையில் 15 வழக்குகள் பதிவு
10-Apr-2025
சென்னை:சென்னையில், ஐந்து ஆண்டுகளில் காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கையால், பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளது என, கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.இது குறித்து கமிஷனர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில், சட்டம் - ஒழுங்கை காப்பதிலும், முறையான ரோந்து கண்காணிப்பு பணி வாயிலாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களை தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொலை வழக்குகள்இதன் காரணமாக, 2021ம் ஆண்டு 94 கொலை வழக்குகளும், 2022ல், 97 கொலை வழக்குகளும், 2023ம் ஆண்டு, 102 கொலை வழக்குகளும், 2024ம் ஆண்டு 102 கொலை வழக்குகள் பதிவாகின. ஆனால் நடப்பாண்டில் எடுக்கப்பட்ட சீரிய தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, 29 கொலை வழக்குகள் மட்டுமே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 3 போக்கிரி கொலை குற்றங்கள் மட்டுமே நடந்துள்ளது.கொள்ளை வழக்குகள் கடந்த 2021ம் ஆண்டு 15 வழக்குகள்; 2022ம் ஆண்டு 11 வழக்குகள்; 2023ம் ஆண்டு 17 வழக்குகள்; 2024ம் ஆண்டு 13 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் நடப்பாண்டில், இதுவரை, ஒரு வழக்கு மட்டுமே பதிவாகி உள்ளது.வழிப்பறி வழக்குகள்கடந்த 2021ம் ஆண்டு 392 வழக்குகள்; 2022ம் ஆண்டு 405 வழக்குகள்; 2023ம் ஆண்டு 325 வழக்குகள்; 2024ம் ஆண்டு 258 வழக்குகள் பதிவாகி இருந்தன. நடப்பாண்டில், 51 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள்கடந்த 2021ம் ஆண்டு, 416 வழக்குகளும், 2022, 2023, 2024ம் ஆண்டுகளில், 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் நடப்பாண்டில், 326 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.முக்கிய குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து, சட்ட நடவடிக்கைகள் எடுத்து வரப்படுவதால், சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Apr-2025