உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகனை தாக்கியவரை தடுத்த  வி.சி., பிரமுகருக்கு வெட்டு

மகனை தாக்கியவரை தடுத்த  வி.சி., பிரமுகருக்கு வெட்டு

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, வ.உ.சி நகர், 1வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 53 ; வி.சி., கட்சி உறுப்பினர். கடந்த 29ம் தேதி, அவரது மனைவி லுார்துமேரி, மகன் ஜோதி நிரஞ்சன் இருவரும், அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, வழியில் நின்றிருந்த பிரசாந்த் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரசாந்த், அவரது நண்பர்களுடன் ஜோதி நிரஞ்சன் வீட்டிற்கு சென்று, அவரை தாக்க முயன்றபோது, லுார்து மேரி, மகனை அறையில் வைத்து கதவை பூட்டி உள்ளார். ஆத்திரமடைந்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள், கதவு, ஜன்னலை உடைத்தனர். ராஜேந்திரன் தடுக்க முயன்றபோது, கத்தியால் அவரது தலையில் வெட்டி, கல்லால் தாக்கிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். புளியந்தோப்பைச் சேர்ந்த சரவணன், 24, ஊட்டி வாய் அபி, 25, இருவரும் போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். ஊட்டி வாய் அபி மீது, மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக உள்ள பிரசாந்த் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை