மேலும் செய்திகள்
இன்று இனிதாக
17-Feb-2026
ஜல்லடியன்பேட்டை: ஜல்லடியன்பேட்டை, சாய் கணேஷ் நகரில், தனியார் கட்டட கட்டுமான பணி நடக்கிறது. அங்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி சபிக், 30, உட்பட, ஐந்து குடும்பங்கள், தற்காலிக கொட்டகை அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சபிக் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, காஸ் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி சிலிண்டர் வெடித்தது. ஆனால், அதற்குள் அங்கிருந்த அனைவரும் வீட்டிலிருந்து வெளியே ஓடியதால், காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின. சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
17-Feb-2026