உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உயர் மின்னழுத்தத்தால் மின்சாதனங்கள் சேதம்

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதனங்கள் சேதம்

சேத்துப்பட்டு, உயர் மின்னழுத்தத்தால், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள வீடுகளில், மின்சாதன பொருட்கள் சேதமடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அண்ணா நகர் மண்டலம், 108வது வார்டில் உள்ள, சேத்துப்பட்டு, பிருந்தாவனம் மற்றும் மங்களபுரம் பகுதிகளில், நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் சில மாதங்களாக, மின் வினியோகத்தில் திடீர் திடீரென உயர் அழுத்தம் எற்படுகிறது. இதன் காரணமாக, மின் மோட்டார்கள், ஏசி, உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பிரித்திவ்ராஜ் கூறுகையில், ''பிருந்தாவனம், மங்களபுரத்தில் உள்ள வீடுகளில், ஆறு மாதங்களாக உயர் மின் அழுத்த பிரச்னை உள்ளது. ''இதனால், பல மின்சாதனங்கள் பழுதாகின்றன. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். உயிர்பலி ஏற்படும் முன், நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை