ராஜிவ் காந்தி நகரில் குடிநீர் சப்ளை பாதிப்பு
ஆவடி, ஆவடி மாநகராட்சி, ஐந்தாவது வார்டில் ராஜிவ் காந்தி நகர் 7, 8வது தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பிருந்தாவன் நகர் முதல் தெருவில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய் வாயிலாக மேற்கூறிய இரண்டு தெருவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக, இரண்டு தெருவில் 32 பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன், அங்குள்ள 20க்கும் மேற்பட்ட குழாய்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன. இதனால், குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, அப்பகுதிவாசிகள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.