உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை சேகரிப்போர் சங்க தலைவிக்கு கொலை மிரட்டல்

குப்பை சேகரிப்போர் சங்க தலைவிக்கு கொலை மிரட்டல்

கொடுங்கையூர், கொடுங்கையூர், நான்காவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜெயந்தி என்கிற ராக்கு, 45. இவர், கடந்த 30 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பை சேகரித்து வருகிறார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன், தமிழ்நாடு குப்பைமேடு குப்பை பொறுக்கும் தொழிலாளர் சங்கம் ஆரம்பித்து, அதில் தலைவியாக இருந்து வருகிறார்.இந்நிலையில், கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர், நான்காவது பிரதான சாலையைச் சேர்ந்த ஜெகநாதன், 50, என்பவர், மது போதையில் ஜெயந்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரை விசாரித்த கொடுங்கையூர் போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை