மேலும் செய்திகள்
அரசு கட்டடம் படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை
17-Mar-2025
பம்மல் தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் - 1, பம்மல், பசும்பொன் நகரில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அங்கு, சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் படிக்கின்றனர்.இந்த கட்டடம் பழமையானது என்பதால், சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.அதனால், சிறுவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தார்.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கல்வி நிதியின் கீழ், 19 லட்சம் ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்துள்ளனர்.
17-Mar-2025