கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய மருத்துவமனை கட்டடம் இடிப்பு
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., கால்வாயில், 1.800 மீட்டருக்கு தடுப்பு சுவர் கட்டும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, கே.கே.நகர் ராமசாமி சாலையில், கால்வாயை 1,000 சதுர அடி ஆக்கிரமித்து எஸ்.எம்., தனியார் மருத்துவமனை நிர்வாகம், 'ஸ்கேன்' மையம் கட்டியிருப்பது தெரிந்தது.இதையடுத்து நேற்று, ஸ்கேன் மையத்தின் கட்டடத்தை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக மாநகராட்சியினர் இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 80 லட்சம் ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.