உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கோவில் இடத்தில் கடைகள் இடிப்பு

 கோவில் இடத்தில் கடைகள் இடிப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பல ஆண்டுகளாக ஹோட்டல் மற்றும் காய்கறி கடைகள் வைத்து, வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த கடைகளுக்கு உரிய முறையில் வாடகை செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளதால், அதை நிறுத்துவதற்காக முன்னறிவிப்பு இன்றி, இரண்டு கடைகளை இடித்து அகற்றும் பணியில், அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின், போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் இடிக்கப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ