ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க ஆர்ப்பாட்டம்
தாம்பரம்: குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில், கேட் மூடும்போது, ஜி.எஸ்.டி., சாலை, ராதா நகர் சாலையில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அங்கு, இலகு ரக வாகன சுரங்கப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2007ல் பணிகள் துவங்கின.பல கட்ட பிரச்னைகளுக்கு பின், 2024, மே மாதம் இச்சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை பணிகள் முடியவில்லை. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று ராதா நகர் சுரங்கப்பாதை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.