சாலையை சீரமைக்க ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி, 25வது வார்டு, குமரன் குன்றம் - காந்தி நகர் இணைப்பு சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளது.இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, எத்தனையோ முறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து, மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மற்றும் மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், நேற்று காலை, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மாநகராட்சிக்கு எதிராகவும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.