டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி தடகளம் வணிக துறை மாணவர்கள் அசத்தல்
சென்னை அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில், விளையாட்டு தினவிழா, நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.போட்டியில், கல்லுாரியின் பல்வேறு துறைகளை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.தடகளத்தில், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., மற்றும் 1,500 மீ., பந்தயங்கள், 4x100 மீ., மற்றும் 4x400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் உட்பட வாலிபால், கால்பந்து என, பல்வேறு வகையான போட்டிகள் இடம்பெற்றன.ஷிப்ட் - 1 பிரிவு ஆண்களுக்கன தடகளத்தில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை -வணிக பொதுத் துறை மாணவர்கள் வென்றனர். இரண்டாம் இடத்தை பொருளாதாரத் துறை மாணவர்கள் கைப்பற்றினர்.பெண்களில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை -பொருளாதாரத் துறை மாணவியரும், இரண்டாம் இடத்தை- கணிதத் துறை மாணவியரும் பெற்றனர்.அதேபோல், ஷிப்ட் - 2 பிரிவு தடகளத்தில், பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை- வணிக பொதுத் துறை மாணவியர் பெற்றனர். குற்றவியல் துறை மாணவியர் இரண்டாமிடத்தை கைப்பற்றினர்.இதே பிரிவில், ஆண்களில்,- வணிக நிர்வாகத் துறை, குற்றவியல் துறை முதல் இரண்டு இடங்களை பிடித்தன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கூடுதல் தலைமைச் செயலர் தென்காசி எஸ்.ஜவஹர், கல்லுாரி முதல்வர் எஸ்.சந்தோஷ் பாபு, செயலர் அசோக் குமார் உள்ளிட்டோர் வழங்கினர்.நிகழ்வில், பொருளாளர் அசோக் கெடியா, உடற்கல்வி இயக்குனர்கள் கார்த்திகேயன், வசந்த்குமார் ஆகியோர் இருந்தனர்.