ரூ.2,000 லஞ்சம் கேட்டார்களா? டிராபிக் போலீசாரிடம் விசாரணை
சென்னை, சிக்னல் விதிமீறலுக்கு அபராதம் விதிக்காமல் இருக்க, போக்குவரத்து போலீசார், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சம்சுகனி கபீப் என்பவரின் சமூக வலைத்தள பதிவு:பாலவாக்கம் சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு 8:20 மணியளவில், போக்குவரத்து போலீசார் ஆறு பேர் வாகனங்களை கண்காணித்தனர்.அப்போது, என் வாகனம் சிக்னலை மீறிவிட்டதாகவும், 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றனர். லஞ்சமாக, 2,000 ரூபாய் கொடுத்தால் வாகனத்தை விடுவிப்பதாகவும் கூறினர்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.இதற்கு, சென்னை மாநகர போலீசார், சமூக வலைதளம் வாயிலாக அளித்துள்ள பதிலில்,'இந்த நிகழ்வு சம்பந்தமான விபரங்களை, gmail ன்ற இ - மெயில் முகவரிக்கோ அல்லது 90031 30103 என்ற வாட்ஸாப் எண்ணிற்கோ தெரிவிக்கலாம். உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்துள்ளனர். 'சமூக வலைதள பதிவு அடிப்படையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது' என, போக்குரவத்து போலீஸ் அதிகாரிகள் கூறினர்.***