காலமானார்
சென்னை: சென்னை மாநில கல்லுாரியின் ஓய்வு பெற்ற பேராசிரியரும், தென்னக எல்லைப் போராளியுமான யோகீசுவரன், 90, உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் இன்று (நவ.,23) அதிகாலை காலமானார். அவருக்கு மனைவி பாஞ்சாலி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். மறைந்த பேராசிரியர் யோககீசுவரன், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் புத்தேரி கிராமத்தில், 1936ல் பிறந்தவர். மாணவ பருவத்திலிருந்தே தென்னக எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டவர். ‘திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, வடக்கு எல்லைப் போராட்ட வரலாறு’ உட்பட பல நுால்களின் ஆசிரியரான அவர், முன்னணி நாளிதழில்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். எழுதிரள் அமைப்பின் சார்பில், 2025ல், ‘தமிழினப் போராளி விருது’ பெற்றுள்ளார். பேராசிரியர் யோகீசுவரனின் இறுதிச்சடங்கு, இன்று மதியம் 3:00 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும். தொடர்புக்கு: 8124079999