உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சியிடம் ஒப்படைத்த சாலையில் விரிவாக்க பணி நடக்காததால் சிரமம்

மாநகராட்சியிடம் ஒப்படைத்த சாலையில் விரிவாக்க பணி நடக்காததால் சிரமம்

மதுரவாயல்வளசரவாக்கம் ஆற்காடு சாலை மற்றும் மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைப்பது, ஆலப்பாக்கம் பிரதான சாலை.ஆற்காடு சாலை முதல், மதுரவாயல் வரை, 2.9 கி.மீ., சாலை, 6.10 மீட்டர் அகலத்தில் உள்ளது.தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற, நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு, அதற்கான முதற்கட்ட பணியை மேற்கொண்டு வருகிறது.இதையடுத்து, ஆற்காடு சாலையில் இருந்து, 600 மீ., துாரம், 25 மீ., அகலத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய, 8.2 கோடி ரூபாயில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.இதற்காக, 64,500 சதுரடி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 25,000 சதுரடி நிலம், அரசு நிலமாக இருந்தது. இதில், 600 மீ., சாலை முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை தற்போது, மாநகராட்சி பேருந்து வழித்தட துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 600 மீ., விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட மீதமுள்ள 2.3 கி.மீ., சாலையில் விரிவாக்க பணி நடக்கவில்லை.இச்சாலையில், தனியார் கல்லுாரிகள், திரையரங்கம், விளையாட்டு திடல், அரசு பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. குறுகிய சாலை என்பதால், திரையரங்கில் இருந்து வாகனங்கள் வெளியேறும் போது, கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மீதமுள்ள சாலையையும் விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி