தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் படூர் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் உற்சாகம்
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், படூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த, 'தினமலர் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கேளம்பாக்கம் அருகே ஓ.எம்.ஆர்., சாலை, படூர் ஊராட்சியில் உள்ள 'பசுபிக்கா ஹேப்பினஸ் டவர்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடந்தது. 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஓ.எம்.ஆர்., அப்பல்லோ ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டலுடன் ஹுண்டாய், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா மற்றும் ஹோம் கேர் புராடக்ட், பெப்ஸ் இந்தியா பேவரெட் ஸ்ப்ரிங் மேட்ரிஸ் ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்தன. குடியிருப்பின் குட்டீஸ் முதல் பெரியோர் வரை, 500க்கும் மேற்பட்டோர், நிகழ்ச்சி துவங்கிய 4:00 மணிக்கு சரியாக வந்தனர். நிகழ்ச்சி நடந்த வளாகத்தில், அப்பல்லோவின் இலவச மருத்துவ மையம், கார் விற்பனை, ஆடை விற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ் கிரீம் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட விளையாட்டு அரங்குகள் இடம்பெற்றிருந்தன. மினி மாரத்தான், சைக்கிளை மெதுவாக இயக்குதல், மேஜிக் ஷோ, கோலப்போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்டவற்றில், குடியிருப்பு மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனால், அப்பார்ட்மென்ட் வளாகம், இரவு 9:00 மணி வரை விழாக்கோலம் பூண்டது. மேலும், குடியிருப்பில் வசிப்போரின் உறவினரான மதுரையை சேர்ந்த பரம்பரிய மருத்துவரும், ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது பெற்றவருமான ரமணி சேகர், 'தினமலர்' நாளிதழின் சிறப்பு குறித்து, கவிதையாக மேடையில் பேசினார். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பல்லோ மருத்துவமனை மூலம் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 'தினமலர்' நாளிதழ் சந்தா பெற்ற 1,999 பேருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. இங்கு வசிப்போரை ஒரே இடத்தில் பார்த்தது, அவர்களுடன் உற்சாகமாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. மேடை, சிறுவர்களுக்கான விளையாட்டு, ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாடு சிறப்பு. அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர். - சதிஷ்குமார், குடியிருப்பு சங்கத் தலைவர் இந்த கொண்டாட் நிகழ்ச்சியில் இரண்டு விஷயத்தை பார்க்கிறேன். ஒன்று இளம்வயதினரின் திறமை வெளிப்படுகிறது. இரண்டாவது, ஒருவரோடு ஒருவர் சந்திக்க, இந்த நிகழ்வு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இது, குடியிருப்புமக்களுக்கு சிறப்பாக உள்ளது. - ஜெயநாராயணன், குடியிருப்பு சங்க செயலர் இந்த நிகழ்ச்சி, தீபாவளி வரும் நிலையில், சரியான நேரத்தில் அமைந்துள்ளது. சிறுவர்கள் முதல் முதியோர் வரை, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தனர். அதிக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. விளையாடும்போது சிறுவர்களின் முகத்தில் உற்சாகத்தை காண முடிந்தது. - சுவேதா, குடியிருப்பில் வசிக்கும் இல்லத்தரசி