தினமலர் கார்னிவல் கொண்டாட்டம் ஜமீன் பல்லாவரம் குடியிருப்பில் சரவெடி
பல்லாவரம், ஜமீன் பல்லாவரத்தில் நடந்த, 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கார்னிவல் நிகழ்ச்சி, துவக்கம் முதல் நிறைவு வரை, குடியிருப்பு மக்களின் உற்சாகத்தால் சரவெடியாக களைகட்டியது. அடுக்குமாடி குடியிருப்பு மக்களை ஒன்றிணைக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் 'கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை துவங்கியது. அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட் டு வருகிறது. அந்த வரிசையில், ஜமீன் பல்லாவரம், வேலன் நகர், 200 அடி ரேடியல் சாலையை ஒட்டியுள்ள அலையன்ஸ் கேலரியா ரெசிடென்சஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து, ஓ.எம்.ஆர்., அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், 'ஹுண்டாய், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா மற்றும் ஹோம் கேர் ப்ரோடக்ட், பெப்ஸ், ரூரா ஹாலிடேஸ் உள்ளிட்ட நிறுவன ங்களும் கைகோர்த்தன. நேற்று மாலை துவங்கிய நிகழ்ச்சியில், குடியிருப்பின் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, 600க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் கார் விற்பனை, ஆடை விற்பனை, இயற்கை உணவு பொருட்கள் , கைவினை பொருட்கள், ஐஸ் கிரீம் உள்ளிட்டவற்றின் அரங்குகள் அமைக்கப்பட்டு இரு ந்த ன. குழந்தைகளுக்கான ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் இடம் பெற்றன. மினி மாரத்தான், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மேஜிக் ஷோ, கோலப் போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், நவராத்திரி தாண்டியா ஆட்டமும் நடந்தது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளால், துவக்கம் முதல் இரவு வரை குடியிருப்பு வளாகமே சரவெடியாக உற்சாகத்தில் களைகட்டியது. என் குழந்தைகள் சைக்கிள், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று சந்தோஷமாக இருந்தனர். பெரியவர்களுக்கு மாரத்தான் இல்லை. இருப்பினும், பாட்டு, நடன போட்டிகளில் பங்கேற்று சந்தோஷமாக கொண்டாடினோம். 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. - இந்திரா பிரியதர்ஷினி, 40. இங்கு 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிகழ்ச்சியால், இக்குடியிருப்பு மக்களிடையே ஒருங்கிணைப்பு இன்னும் மேம்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடத்தியதற்கு 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்துகள். - இளங்கோ சந்திரகுமார், 59. நிகழ்ச்சி வேற லெவலில் இருந்தது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை சந்தோஷமாக கொண்டாடினர். போட்டிகள் முதல் மேடை வரை, ஒவ்வொன்றையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறோம். - லாவண்யா, 38.