வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Only south Chennai fellas will visit...It is far for Rest of Chennai. Earlier venue of St.Georges School, Kilpauk was centric for all parts of Chennai.
Why did you change the Venue from St.Georges School, Kilpauk?
சென்னை: சென்னை, நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லுாரியில், 10 ஆண்டுகளுக்கு பின், வரும் ஆக., 1 முதல், 4ம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன், சென்னை மக்களை, 'ஷாப்பிங்'கால் திணறடிக்க வருகிறது.'தினமலர்' மற்றும் 'சத்யா' இணைந்து வழங்கும், 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2025' வீட்டு உபயோக பொருட்கள் நுகர்வோர் கண்காட்சி. இந்த கண்காட்சியில், ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பல அதிசயங்கள் காத்திருக்கின்றன. மக்களே, குடும்பத்தோடு ஜாலியாக வாங்க; குதுாகலமாக ஷாப்பிங் செய்யுங்க; வாங்கும் பொருட்களுடன் அதிர்ஷ்டத்தையும் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்.ஏராளமான பொருட்கள்
கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த, 250 'ஏசி' சாதன வசதியுடன் கூடிய 'ஸ்டால்'கள் இடம் பெறுகின்றன. நந்தனம் YMCA உடற் கல்வியியல் கல்லுாரி உள்ளே நுழைந்தால், 'இது நம்ம சென்னையா' என ஆச்சரியத்தை ஏற்படுத்தி, 'ஹைடெக் மெகா ஷாப்பிங்' உலகத்திற்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்தும்.கண்காட்சின்னா வெறும் பொருட்களை மட்டும் தான் வச்சிருப்பாங்கன்னு நினைக்க வேண்டாம். கடல் மாதிரி கடைகள் விரிந்து பரந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 10 ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு ஏற்ற பொருட்களை வாங்கலாம். கண்காட்சியில் எலக்ட்ரானிக்ஸ், அப்ளையன்சஸ், பர்னிச்சர்ஸ், பெங்களூரு கிராப்ட் பர்னிச்சர்ஸ், ஸ்பேஸ் சேவிங் பர்னிச்சர்ஸ், யுனிக் ஹவுஸ்ஹோல்ட் புராடக்ட்ஸ், ஜெய்ப்பூர் கார்மென்ட்ஸ், கோலாப்பூரி செப்பல்ஸ், மும்பை பேஷன் ஜுவல்லரி, டில்லி புட்வேர், கான்பூர் லெதர் புராடக்ட்ஸ், ராஜஸ்தான் மார்பிள்ஸ் அண்டு மெட்டல் கிராப்ட்ஸ் ஆகிய பொருட்கள் அடங்கிய ஸ்டால்கள் இடம்பெறுகின்றன.Advertisementhttps://www.youtube.com/embed/fWWb5XBQdUcஎலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் ஸ்டால்களில், 'ஸ்மார்ட் போன், டிவி, பிரிஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், ஹோம் தியேட்டர்' மற்றும் கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், அலங்கார மின் விளக்குகள், கொசு வலை என, எந்த பொருட்களையும் வாங்கலாம்; தள்ளுபடி, இலவசத்தோடு வாங்கலாம்.பெண்களே...
ரெடிமேட் ஆடைகள், அழகு சாதனம், பேன்ஸி பேக்ஸ், கலைநயமிக்க டிசைனர் ஜுவல்லரி, காலணிகள், பாரம்பரிய சேலை ரகங்கள் என, நீங்கள் விரும்பியதை மனம்போல் வாங்கலாம்.உங்கள் அழகான வளைகரங்களுக்கு மேலும் அழகூட்டும் வகையில், அட்டகாசமான டிசைன்களில் மெகந்தியை இலவசமாக வரையலாம்.ஆண்களுக்கான ரெடிமேட் சர்ட், டி - சர்ட், பேன்ட் உள்ளிட்ட ஆடைகளும் அட்டகாசமான தள்ளுபடி விலைகளில் கிடைக்கும்.கேம் ஷோ
கண்காட்சியில் குட்டீஸ்களை குஷிப்படுத்தும் 'கேம் ஷோ' களைகட்டும். உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க, பேட்டரி கார், வாட்டர் போட், சிக்கு புக்கு ரயில், ஹேப்பி பன்சிட்டி, பலுான் ஷூட்டிங், ஒய்யார ஒட்டக சவாரி என, பல பொழுதுபோக்கு அம்சங்கள் காத்திருக்கின்றன.அவற்றில் உங்கள் குட்டீஸ்களை விளையாட வைத்து, அவர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைக்கலாம். ஸ்டால்களில் குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்களும் வாங்கலாம். வண்ண வண்ண பலுான்களும் இலவசமாக கிடைக்கும்.பார்க்கிங் வசதி
டூ-வீலர், பார்க்கிங் வசதி, மருத்துவ உதவி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பிற்காக 'சிசிடிவி கேமரா'க்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஷாப்பிங்கிற்கு தேவையான அனைத்து ஆச்சரியங்களும் ஒரே இடத்தில் கொட்டிக் கிடக்கும் இக்கண்காட்சியானது, ஒவ்வொரு நாளும் ஆனந்தம் தரும்.வீடு கட்டலாம், கார் வாங்கலாம்
ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ஒரு பகுதியாக, 'பில்டு எக்ஸ்போ' மற்றும் 'ஆட்டோமொபைல்ஸ் எக்ஸ்போ' நடத்தப்படுகிறது. ஒரே இடத்தில் பலவிதமான புரமோட்டர்கள், முன்னணி கார் நிறுவனங்களின் தயாரிப்புகளை பார்வையிடலாம்.சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற உங்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அச்சாரம் போடலாம்.எந்த பிராண்ட் கார் வாங்கலாம்; எந்த மாடல் வாங்கலாம்; என்ன விலை என்பதை இணையதளத்தில் தேடிக் கொண்டிருக்காமல், கண்காட்சிக்கு நேரில் வந்து பார்வையிட்டு, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற காரை வாங்கி செல்லலாம்.ருசியான உணவுகள்
ஒவ்வொரு ஸ்டால் ஸ்டாலாக ஷாப்பிங் செய்து, சோர்ந்து விட்டால் என்ன செய்வது என கவலை வேண்டாம். 'புட் கோர்ட்'க்குள் புகுந்து, கமகமக்கும் வகை வகையான உணவுகளை ருசிக்கலாம்.மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிங்கர் பிஷ், பிஷ் பிரை என, வகை வகையாக உணவுகளை உண்டு மகிழலாம்.ஸ்டால்களில் போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஐஸ்கிரீம், குல்பி என, உணவு வகைகள் வரிசை கட்டி இருக்கும்.இணையும் கரங்கள்
'தினமலர்' நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில், ஆல்பா பர்னிச்சர், கோவை லட்சுமி, பிராங் பேபர் ஆகிய நிறுவனங்கள், 'கோ ஸ்பான்சர்'களாக கரம் சேர்க்கின்றன.
Only south Chennai fellas will visit...It is far for Rest of Chennai. Earlier venue of St.Georges School, Kilpauk was centric for all parts of Chennai.
Why did you change the Venue from St.Georges School, Kilpauk?