உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

சென்னை, தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் வில்சன், பொதுச் செயலர் ஜான்சிராணி, முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்னைகளை, கடிதங்கள் வாயிலாகவும், அமைச்சர் கீதாஜீவன் வாயிலாக நேரடியாகவும், தங்களிடம் பல முறை தெரிவித்துள்ளோம்.நடந்து வரும் சட்டசபை கூட்டத் தொடரில், தமிழக முதல்வரும், மாற்றுத்திறனாளிகள் துறைக்கு பொறுப்பான அமைச்சருமான தாங்கள், எங்கள் கோரிக்கைகள் மீது உரிய தீர்வு காணும் வகையில் அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்.கோரிக்கைகள்:* மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை, ஆந்திர மாநிலத்தைப் போல், குறைந்தபட்சம் 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.* நுாறு நாள் வேலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, நான்கு மணி நேர வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.* அரசாணை எண்: 151ன்படி, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.* தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும், 4 சதவீத வேலை வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.* தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊர்திப்படியாக 2,500 ரூபாய் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ