உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு வசதி வாரிய காலி இடத்தில் அத்துமீறல் குப்பை கொட்டும் மாநகராட்சி மீது அதிருப்தி

வீட்டு வசதி வாரிய காலி இடத்தில் அத்துமீறல் குப்பை கொட்டும் மாநகராட்சி மீது அதிருப்தி

கே.கே.: கே.கே., நகர் வீட்டு வசதி வாரிய காலி இடத்தில், அனுமதியின்றி குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை கொட்டும் மாநகராட்சி மீது, வாரிய அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த அத்துமீறல் குறித்து, போலீசில் புகார் அளித்துள்ளனர். கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகர் ராஜமன்னார் சாலையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்திருந்தது. இங்கிருந்த 160 வீடுகள் சேதமடைந்ததால், சில ஆண்டுகளுக்கு முன் முற்றிலுமாக இடிக்கப்பட்டன. புதிய குடியிருப்பு கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடியிருப்பு இடிக்கப்பட்ட பகுதி பள்ளமாக இருந்ததால், அதில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தியானது. அத்துடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடை தடுக்க, மாநகராட்சி சார்பில், அப்பள்ளத்தில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது. இந்நிலையில், ஆங்காங்கே சேகரிக்கப்படும் கட்டட கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை, வீட்டு வசதி வாரிய அனுமதியின்றி, இந்த இடத்தில் மாநகராட்சி கொட்டி குவித்து வருகிறது. இது, இந்த இடத்தை சுற்றி வசிக்கும் குடியிருப்பு மக்களுக்கு அவதியை ஏற்படுத்தி வருகிறது. வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறியதால், மண் கொட்டி சமன் செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி, சட்டவிரோதமாக கட்டட கழிவு மற்றும் குப்பை கொட்டும் இடமாக மாற்றியுள்ளது. இதுகுறித்து, கே.கே., நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொட்டப்பட்டுள்ள மண் மற்றும் குப்பையை அகற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை