மாவட்ட கேரம் போட்டி 360 பேர் உற்சாகம்
சென்னை, நமாவட்ட அளவிலான கேரம் போட்டியில், 360 சிறுவர், சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.சென்னை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., கோடம்பாக்கம் கிளை இணைந்து, மாவட்ட அளவிலான கேரம் போட்டியை, நேற்று துவங்கின. போட்டிகள், அசோக் நகர் ஒய்.எம்.சி.ஏ., கிளை வளாகத்தில் நடக்கின்றன.போட்டியில், ஆடவரில் 96 பேர்; பெண்களில் 32 பேர்; பதக்கம் அல்லாத பிரிவில், 112 பேர்; சப் - ஜூனியர் சிறுமியரில் 30 பேர்; சிறுவரில் 90 பேர் என, மொத்தம், 360 பேர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.சப் - ஜூனியர் சிறுமியரில், சஹானா 25 - 0, 21 - 0 என்ற கணக்கில் யோஷினாவையும், ஸ்ரீஜா, 14 - 6, 18 - 1 என்ற கணக்கில் பிரின்சியையும், சுருதிகா, 21 - 0, 21 - 4 என்ற கணக்கில் திவ்யா பிரியாவையும் தோற்கடித்ததனர்.அதேபிரிவில், சிறுவரில் அஜய், 21 - 0, 21 - 0 என்ற கணக்கில் கிஷோர் குமாரையும், தர்ஷன் 21 - 0, 21 - 0 என்ற கணக்கில் கமேஷையும் வீழ்த்தினர். போட்டிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கின்றன.