உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாவட்ட மருத்துவமனை ஆக., 5ல் திறந்து வைப்பு

மாவட்ட மருத்துவமனை ஆக., 5ல் திறந்து வைப்பு

குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியத்தில், 115.38 கோடி ரூபாய் செலவிலான மாவட்ட மருத்துவமனை கட்டடத்தை, ஆக., 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளதாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி இயங்கி வரும் அரசு தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 110 கோடி ரூபாயில், தாம்பரம் சானடோரியத்தில் புதிதாக கட்டப்பட்டது. இம்மருத்துவமனை கட்டடத்தை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: தாம்பரம் சானடோரியத்தில், மாவட்ட மருத்துவமனை கட்டட பணிகள் முடிந்துள்ளன. இதன் மதிப்பு, 110 கோடி ரூபாய். 5.38 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. மேலும், மாவட்ட மருத்துவமனை கட்டடத்தை ஒட்டி, 28 கோடி ரூபாய் செலவில், தனிமைப்படுத்தப்பட்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இயங்கி வரும் வளாகத்தில், 7.10 கோடி ரூபாய் செலவில் பல் மருத்துவமனை பிரிவு, 1 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த ஆய்வகமும் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை, ஆக., 5ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை