உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / "விஸ்வரூபம் பட காட்சி பிராமணர் சங்கம் புகார்

"விஸ்வரூபம் பட காட்சி பிராமணர் சங்கம் புகார்

சென்னை:'விஸ்வரூபம் படத்தில், ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகளை நீக்க வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) நிர்வாகிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை, இயக்கத்தில், வெளிவர உள்ள, 'விஸ்வரூபம்' திரைப்படத்தில், எங்களது பிராமண சமூகத்தின் கலாசாரத்தை கேலி செய்வது போல், சில காட்சிகள் வசனங்கள் உள்ளன.அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், பார்த்த பலர் கதாநாயகி பிராமண சமூகத்தை சேர்ந்த பெண் என்றும், ஒரு காட்சியில் கமல் அவருக்கு, மாமிசம் சமைத்து கொடுப்பது போலவும் இருப்பதாக எங்களிடம் கூறினர்.இது திரைக்கதைக்கு தேவையற்றது. இந்த காட்சிகள் பிராமண சமூகத்தின் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. மேலும், எங்கள் மனதை புண்படுத்துகிறது. ஆட்சேபரகமான இந்த வசன காட்சிகளை நீக்க, நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.எனவே, எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்