டிவிஷன் கிரிக்கெட் லீக் எழும்பூர் கிளப் வெற்றி
சென்னை,டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், நகரின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.அந்த வகையில், காந்தி நகர் மைதானத்தில் நடந்த, 'பிளே ஆப்' போட்டியில், எழும்பூர் கிளப் மற்றும் சிங்கம் புலி சி.சி., அணிகள் எதிர்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த எழும்பூர் கிளப் 43.3 ஓவர்களில், அனைத்து விக்கெட் இழந்து, 176 ரன்கள் அடித்தது. எதிர் அணியின் வீரர் ஜெபசெல்வின், ஏழு விக்கெட் எடுத்து, 46 ரன்கள் கொடுத்தார்.அடுத்த பேட்டிங் செய்த சிங்கம் புலி சி.சி., அணி, 31.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 155 ரன்கள் எடுத்தது.எழும்பூர் கிளப் வீரர் பாலச்சந்திரன் ஐந்து விக்கெட் எடுத்து, 36 ரன்கள் கொடுத்தார். இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் எழும்பூர் கிளப் அணி வெற்றி பெற்றது.சாந்தோம் செயின் பீட்ஸ் பள்ளியில் நடந்த மற்றொரு போட்டியில், சி.சி.எல்., அணி, 42.2 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 189 ரன்கள் அடித்தது.அடுத்த விளையாடிய சவுந்தர் சி.சி., அணி, 42.4 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு, 192 ரன்களை அடித்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.