மேலும் செய்திகள்
4வது டிவிஷன் கால்பந்து நாளை துவக்கம்
01-Jun-2025
TNPL-லா Mass Performance by Ash அண்ணா
06-Jun-2025
சென்னை,சென்னை கால்பந்து சங்கம் சார்பில், ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை பேசின் பிரிட்ஜ், டான் பாஸ்கோ மைதானத்தில் நடந்து வருகிறது.நேற்று நடந்த போட்டியில், புழல் எப்.சி., அணி, எஸ்.எம்., எப்.சி., அணியை எதிர்த்து மோதியது.போட்டியில், 10வது நிமிடத்தில் புழல் அணியின் திவ்யேஷ் தன் அணிக்கு முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடி தர முயன்ற எஸ்.எம்., எப்.சி., அணிக்கு கடைசி வரை கோலுக்கான வாய்ப்பை எதிர் அணியின் தடுப்பு வீரர்கள் கொடுக்கவில்லை. இதனால் போட்டி முடிவில், 1-0 என்ற கோல் கணக்கில், எஸ்.எம்., எப்.சி., அணியை, புழல் அணி வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
01-Jun-2025
06-Jun-2025