நுங்கம்பாக்கத்தில் நாளை தீபாவளி இயற்கை சந்தை
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த ஆடைகள் மற்றும் இயற்கை பொருட்களின் சிறப்பு விற்பனை சந்தை, நுங்கம்பாக்கம் அன்னைத் தெரசா மகளிர் வளாகத்தில், நாளை துவங்குகிறது.மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த காஞ்சி பட்டுச் சேலைகள், விருதுநகர் காட்டன் புடவைகள், அரியலுார் வாரியங்காவல் புடவைகள், ஈரோடு போர்வைகள், கோவை நெகமம் சேலைகள் உட்பட, பலவகையான ஆடைகள் விற்பனைக்கு உள்ளன.தவிர, பாரம்பரிய அரிசி, சிறுதானியம் மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப் பொருட்கள், பனை ஓலை பொருட்களும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. நாளை மறுநாளுடன் இச்சந்தை முடிகிறது.