மேலும் செய்திகள்
ரூ.16 கோடி மதிப்பீடில் தி.நகரில் மேல்நிலை தொட்டி
30-Dec-2024
அசோக் நகர், சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 131வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நேற்று, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பிலான விளக்க உரை கூட்டம், அசோக் நகரில் நேற்று நடந்தது.தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசுகையில், ''மழைநீர் தேங்காமல் இருக்க, இப்பகுதியில் வடிகால் அமைக்கப்பட்டது. அதனால், மழை பெய்தால் ஒரே நாளில் தண்ணீர் வடிகிறது. ''மக்களுக்கு என்ன தேவையோ, அதை இந்த அரசு பூர்த்தி செய்து வருகிறது. இந்த இயக்கம் மக்களுக்கானது,'' என்றார்.மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வேலு பேசுகையில், ''தி.மு.க., 75 ஆண்டு கால இயக்கம். கட்சியினர் உழைப்பதை பார்த்து, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கக்கூடியது. பெண்களுக்காக ஒவ்வொரு திட்டங்களும் பார்த்து பார்த்து செய்யப்படுகிறது,'' என்றார்.
30-Dec-2024