உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கவுன்சிலரின் கணவரை தாக்கிய தி.மு.க.,வினர்

கவுன்சிலரின் கணவரை தாக்கிய தி.மு.க.,வினர்

வளசரவாக்கம், தி.மு.க., பெண் கவுன்சிலர் கணவர் மீது, தி.மு.க.,வினரே கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.சென்னை பெருநகர மாநகராட்சி, வளசரவாக்கம் 11வது மண்டலம், 153வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் சாந்தி ராமலிங்கம்.போரூரில் உள்ள வார்டு அலுவலகத்தில், இவர் அமரக்கூடிய இருக்கையில், நேற்று இவரது கணவர் ராமலிங்கம், 45, அமர்ந்திருந்தார்.அந்த நேரத்தில், தன் ஆதரவாளர்களுடன் உள்ளே நுழைந்த, ராமாபுரம் 154வது வார்டு தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, 'கவுன்சிலர் இருக்கையில் உட்கார நீ யார்' எனக் கேட்டு, ராமலிங்கத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார்.இதில் ரவியும், ராமலிங்கமும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை