உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமித் ஷாவை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

அமித் ஷாவை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

சோழிங்கநல்லுார், அம்பேத்கர் குறித்து, மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சோழிங்கநல்லுாரில் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் தலைமையிலும், இ.சி.ஆரில் மண்டல குழு தலைவர் மதியழகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், 70 பெண்கள் உள்ளிட்ட 600 பேர் பங்கேற்றனர். வேளச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 30 பெண்கள் உள்ளிட்ட 300 பேர் பங்கேற்றனர். இதில், பதாகைகளை கையில் ஏந்தி, அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.அதேபோல், பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறு ஊராட்சிகளை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் சார்பில், மேடவாக்கம் சந்திப்பு சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, அமித் ஷாவிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கிழிந்து தொங்கிய பேனர்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜா, கருணாநிதி, வரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்திற்கு முன், மேடையின் பின்புறம் கட்டப்பட்டிருந்த பேனர், காற்றில் கிழிந்து, மேடையில் விழுந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின், அதை எடுத்து மீண்டும் கட்டி, ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ