தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
சென்னை:நாகர்கோவில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரணத்திற்கு நீதி கேட்டு தி.மு.க., மாற்றுத்திறனாளி அணி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலர் தீபக்நாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வடசென்னை எம்.பி., கலாநிதி, துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ., சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, அரசு எதிராக கோஷங்களை எழுப்பினர். ***