தேசிய நீச்சல் போட்டி டால்பின் அகாடமி அசத்தல்
சென்னை: தேசிய அளவில், ஆண்களுக்கான நீச்சல் போட்டி ஹரியானாவிலும், பெண்களுக்கான போட்டி, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரிலும், கடந்த மாதம் இறுதியில் நடந்தன. இதில், டால்பின் அகாடமி சார்பில் பங்கேற்ற வீராங்கனையர் எஸ்.வி.ஹாசினி, 50 மீ., 100 மீ., மற்றும் 200 மீ., 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவுகளில், தலா ஒரு தங்கம் வென்றார். ஹர்ஷினி பிரபு, 50 மீ., 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் ஒரு வெண்கலம் வென்றார். அதேபோல, ஆண்களுக்கான பிரிவில் டால்பின் அகாடமியின் கிருஷ் கெய்சவ், 100 மீ., மற்றும் 200 மீ., 'பேக் ஸ்ட்ரோக்' பிரிவுகளில் தலா ஒரு வெள்ளி பதக்கம் வென்றர். அதுமட்டுமல்லாமல் ஏ.பி.ஆர்ய சதார், 50 மீ., மற்றும் 100 மீ., 'பேக் ஸ்ட்ரோக்' பிரிவுகளில் தலா ஒரு தங்கமும், 200 மீ., தனிநபர் 'மெட்லே' மற்றும் 200 மீ., 'பேக் ஸ்ட்ரோக்' பிரிவுகளில் தலா ஒரு வெள்ளியும் வென்றார். அந்தவகையில் ஐந்து தங்கம், நான்கு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 10 பதக்கங்கள் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.