உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.60 கோடி மதிப்பீட்டில் வடிகால் பெருங்குடியில் பணிகள் துவக்கம்..

ரூ.60 கோடி மதிப்பீட்டில் வடிகால் பெருங்குடியில் பணிகள் துவக்கம்..

பாலவாக்கம்: பெருங்குடி மண்டலம், வார்டு- 181க்கு உட்பட்ட கொட்டிவாக்கம், வார்டு -183க்கு உட்பட்ட பாலவாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், வார்டு- 192க்கு உட்பட்ட நீலாங்கரை பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய் பணி, 60 கோடி ரூபாய் மதிப்பில், சில நாட்களுக்கு முன் துவக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொட்டிவாக்கத்தில், மொத்தமுள்ள 41 தெருக்களில், 6 கி.மீ., நீளம், பாலவாக்கத்தில் 72 தெருக்களில் 7.5 கி.மீ., நீளம், நீலாங்கரையில் 6 கி.மீ., நீளத்திற்கு இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இத்திட்டம், கே.எப்.டபிள்யு., எனப்படும் ஜெர்மன் டெவலப்மென்ட் வங்கியின் நிதியுதவியில், எம் - 2 கோவளம் வடிகால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.இவ்வங்கியில், சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் கடன் பெற்று, இத்திட்டத்தை துவங்குகிறது.இக்கால்வாய், பக்ஹிங்காம் கால்வாயில் இணைக்கப்படும். இத்திட்டத்தை, 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சைதைக்கு ரூ.2.40 கோடி

கோடம்பாக்கம் மண்டலம், 142வது வார்டு சைதாப்பேட்டையில், ஜீனிஸ் சாலை மற்றும் பஜார் சாலை உள்ளது. இவை, அண்ணா சாலை மற்றும் ஆலந்துார் பிரதான சாலைகளை இணைக்கின்றன.மழைக்காலத்தில் அண்ணா சாலையில் வடியும் தண்ணீர், பஜார் சாலையில் தேங்குகிறது. இதற்கு காரணம், ஜீனிஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் பாழடைந்த நிலையில் உள்ளது.மழைநீர் தேங்குவதை தடுக்க, ஜீனிஸ் சாலையில் 1.30 கி.மீ., துாரத்திற்கும், பஜார் சாலையில் 1.1 கி.மீ., துாரத்திற்கும் மழைநீர் வடிகால் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதையடுத்து, இரு சாலைகளிலும் 2.40 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்து, அண்ணா சாலை வழியாக அடையாற்றில் இணைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி