மேலும் செய்திகள்
சைபர் வழக்கு 10 பேர் கைது ரூ.42.72 லட்சம் மீட்பு
1 hour(s) ago
மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
2 hour(s) ago
ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
ஆலந்துார், கோடைக்கால குடிநீர் பிரச்னையை சமாளிப்பது குறித்து, அமைச்சர் அன்பரசன் தலைமையில் நேற்று, மண்டல அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் மின்வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அப்போது கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் தற்போதே குடிநீர் பிரச்னை உள்ளதாகவும், குடிநீர் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் புகாரளித்தனர்.மேலும், அடிக்கடி அறுந்து விழும் மின்கம்பிகளை மாற்றக் கோரியும், சாய்ந்து காணப்படும் பழைய மின்கம்பங்களை மாற்ற வேண்டும் எனவும் கோரினர்.அமைச்சர் அன்பரசன் பேசுகையில்,''பொதுமக்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்களுக்கு அவப்பெயர் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீர், மின்சார பிரச்னை போன்றவற்றை சரிசெய்ய வேண்டும்,'' என்றார்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago