உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் ஒருமையில் பேசிய ஓட்டுநர் கைது

பெண்ணிடம் ஒருமையில் பேசிய ஓட்டுநர் கைது

திருவான்மியூர்,:வங்கதேச நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண், தரமணியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம், தரமணியில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்கு, ஆட்டோவில் சென்றார்.ஆட்டோ கட்டணம் 118 ரூபாய் வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரான திருவான்மியூர், நேதாஜி நகரைச் சேர்ந்த பால்பாண்டி, 40, என்பவர், கூடுதலாக 20 ரூபாய் கேட்டுள்ளார். இதுதொடர்பாக, அந்த பெண்ணிற்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், பால்பாண்டி, அப்பெண்ணை தரக்குறைவாக பேசியுள்ளார். இதை உடன் வந்த மற்றொரு பெண், அவரது மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.இதையடுத்து, திருவான்மியூர் போலீசார், நேற்று அந்த பெண்ணிடம் புகார் பெற்று, பால்பாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ