மேலும் செய்திகள்
வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
22-Apr-2025
வேளச்சேரி:வேளச்சேரி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பாபு, 50; ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும், குறையாத நிலையில் காலில் இரண்டு விரல்கள் அகற்றப்பட்டன. நோயின் தீவிரம் அதிகரித்ததால், ஒரு காலை அகற்ற வேண்டும் என, மருத்துவர்கள் கூறி உள்ளனர். ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கால் அகற்ற கூறியதால், மனமுடைந்த பாபு, மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார். அவரது மகன், வீட்டுக்கு அழைத்து சென்றார். உறவினர்கள் ஆறுதல் கூறினர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் துாங்கியவர், நேற்று பார்த்தபோது துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Apr-2025